காத்தான்குடி, புதிய காத்தான்குடியின் சமுர்த்தி வங்கி மற்றும் வங்கிச்சங்க முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜூத் தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் 19.06.2025 அன்று இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் கடந்த ஜனவரி தொடக்கம் மார்ச் வரையான மூன்று மாதங்களுக்கான சேமிப்புக்கள், கடன் வழங்கல், சமுதாய அடிப்படை கூட்டங்கள், சிரமதான நிகழ்வுகள், வங்கி முன்னேற்ற செயற்பாடுகள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுகளை சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் ஒளிப்படக்காட்டி (Projector) மூலம் விளக்கமளிக்கப்பட்டன.
இக்கூட்டத்தில் உதவிப்பிரதேச செயலாளர் சில்மியா, சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் வாமதேவன், தலைமையக முகாமையாளர் பத்மா ஜெயராஜ், திட்ட முகாயைாளர் சுபந்தினி, வங்கி முகாமையாளர்களான முஸம்மில் மற்றும் சுல்மி, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வங்கிச்சங்க கட்டுப்பாட்டுச் சபை தலைவர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.








இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










