2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி இன்று (05) இடம்பெறுகின்றது. இன்றைய போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதுகின்றன. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது. 2019 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியுஸிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதல் முறையாக உலகக்கிண்ணத்தை சுவீகரித்தது. இதேவேளை, இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணியை டோம் லேதம் வழிநடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.