பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் அப்துல் றஹீம் தலைமையில் 21.11.2023 அன்று பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட புதிய நிர்வாகக் கட்டடம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் திறந்து வைக்கப்பட்டது .
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.முரளிதரன், கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர், ஆளுநரின் அதிகாரிகள், வைத்தியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப்பொத்துவில் ஆதார வைத்தியசாலை மிக விரைவில் மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு பாரியளவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும், இதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் சுற்றுலாத்துறைக்குப் பெயர்போன அறுகம்பே பிரதேசம் இங்குள்ளதால் இந்த வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதியும் வெளிப்படுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முஷாரப் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇