தாளையடியில் அமைந்துள்ள கடல்நீரை நன்னீராகச் சுத்திகரிப்புச் செய்யும் நிலையத்தை பார்வையிட்டார் வட மாகாண ஆளுநர்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

யாழ்ப்பாணம் – கிளிநொச்சசி குடிநீர் விநியோக திட்டத்தின், தாளையடியில் அமைந்துள்ள கடல்நீரை நன்னீராகச் சுத்திகரிப்புச் செய்யும் நிலையத்தை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்று (28.02.2025) நேரில் சென்று பார்வையிட்டார்.

ஆளுநரை, திட்டப் பணிப்பாளர் பொறியியலாளர் திருமதி எஸ்.மாலதி, பொறியியலாளர் விஜயகாந் தலைமையிலான குழுவினர் வரவேற்றனர். குடிநீர் விநியோகத் திட்டத்தின் கட்டுப்பாட்டு அறையின் செயற்பாடுகளை ஆளுநர் பார்வையிட்டார். அதன் பின்னர் கடல்நீரை உள்ளெடுக்கும் நிலையம், சுத்திகரிப்பு மற்றும் விநியோகம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளையும் நேரில் சென்று பார்வையிட்டார். இதன்போது திட்டப் பணிப்பாளர் மற்றும் பொறியியலாளர்களால் உரிய விளக்கங்களும் ஆளுநருக்கு வழங்கப்பட்டன.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇


Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects