படசாலைகள் மற்றும் பொதுமக்களுக்காக நடத்தப்படும் மரதன் மற்றும் நெடுந்தூர ஓட்டப் போட்டிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் குறித்த புதிய சுற்றறிக்கையை விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் வெளியிட்டுள்ளது.
குறித்த சுற்றறிக்கையின்படி,
மரதன் மற்றும் நெடுந்தூர ஓட்டப் போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து விளையாட்டு வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவது கட்டாயமாகும்.
மரதன் ஓட்டப் போட்டிகளில் ஈடுபடும் விளையாட்டு வீரர்கள் மருத்துவ அறிக்கை மற்றும் ஈசிஜி அறிக்கையை வைத்தியரிடம் வழங்க வேண்டும்.
நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை காரணமாக அண்மையில் பதிவான விளையாட்டு வீரர்களின் துரதிஷ்டவசமான மரணங்களை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇