பேராதனை பல்கலைக்கழகத்தின் புதிய பிரதி உபவேந்தராக ரஞ்சித் பல்லேகம நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் பேராதனை பல்கலைக்கழகத்தின் ஊழியர்கள் அபிவிருத்தி மையத்தின் முன்னாள் பணிப்பாளர் மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்தின் உள்ளக தர பாதுகாப்பு மத்திய நிலையத்தின் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
முன்னாள் பிரதி உபவேந்தராக செயற்பட்ட பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் உபவேந்தராக பதவியேற்றதன் பின்னர் ஏற்பட்ட பதவிக்காகவே பேராசிரியர் ரஞ்சித் பல்லேகம நியமிக்கப்பட்டுள்ளார்.
1997 ஆண்டில் பேராதனை பல்கலைக்கழகத்தின் பல் வைத்திய பீடத்தின் பல் மருத்துவ பட்டத்தைப் பெற்றதன் பின்னர் உதவி விரிவுரையாளராக பல்லேகம பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியதுடன், அவர் ஜப்பான் டோக்கியோவின் மருத்துவ மற்றும் பல் மருத்துவ பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டத்தைப் பெற்றிருக்கின்றார்
புதிய பிரதி உபவேந்தர் 04.09.2024 அன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதுடன், இதன்போது உபவேந்தர் டெரன்ஸ் மதுஜித் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇