‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு கொமர்ஷல் வங்கி வழங்கிய நன்கொடை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் பரோபகாரர்களிடமிருந்து நாளாந்தம் நன்கொடைகள் கிடைத்து வருகிறது.

அதன்படி, கொமர்ஷல் வங்கி (Commercial Bank) இனால் 110 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டது.

Commercial Bank இன் தலைவர் Sharhan Muhseen , இந்த நிதி நன்கொடைக்கான காசோலையை, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் 22.12.2025 அன்று ஜனாதிபதி செயலகத்தில் கையளித்தார்.

Commercial Bank சார்பாக, அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் S.C.U. Manathunga, பிரதான செயல்திட்ட அதிகாரி S.Prabagar, மேலதிக பொது முகாமையாளர் Ashani Senevirathane ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects