சீன அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் மானிய முறையில் கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் விநியோகத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பேருவளை துறைமுகப்பகுதியில் குறித்த நடவடிக்கை நேற்று (12) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாடளாவிய ரீதியில் உள்ள 28 ஆயிரம் மீனவர்களுக்கு மானிய முறையில் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇