பாகிஸ்தான் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள 17 பேர் கொண்ட இங்கிலாந்து குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரைத் தவறவிட்ட பென் ஸ்டொக்ஸ் இந்த தொடரில் இங்கிலாந்து குழாமில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
அதேநேரம், ஷாக் க்ரேவ்லி விலகியிருந்தமையால் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்ற டேன் லோரன்ஸ் பாகிஸ்தான் அணிக்கு எதிரான குழாமில் இணைத்துக் கொள்ளப்படவில்லை.
அத்துடன் உபாதை காரணமாக இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரைத் தவறவிட்ட ஷாக் க்ரேவ்லி தற்போது குணமடைந்து வருவதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான போட்டித் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇