மதகு வழங்கும் ஆரோக்கிய தகவல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இரவில் உறக்கம் கலைந்தால் என்ன செய்யலாம்….

இன்றைய சூழலில் இளைய தலைமுறையினராக இருந்தாலும், மூத்த தலைமுறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் உறக்கம் தொடர்பான பழக்கத்தை சீராக பின்பற்றுவதில்லை. குறிப்பாக இரவு வேளையில் பசியாறிய பிறகு இலத்திரனியல் சாதனங்களை பார்வையிடுவதையும், பாவிப்பதையும் வழக்கப்படுத்திக் கொண்டுள்ளனர். மேலும் நாளாந்தம் வெவ்வேறு மணி தியாலங்களில் உறக்கத்தை தொடங்குகின்றனர். இதன் காரணமாக அவர்களுக்கு பல்வேறு ஆரோக்கியம் தொடர்பான கேடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கிறது.

உடனே எம்மில் சிலர் உறக்கம் தொடர்பான பழக்கத்தை சீராக பாவித்தாலும் பயணம், துக்கம், விருந்தினர்களின் வருகை என பல்வேறு தருணங்களில் இதனை பராமரிக்க முடிவதில்லை. இது போன்ற தருணங்களில் பலருக்கும் உறக்கம் தொடர்பான பழக்கங்களின் இடையூறு ஏற்படுகிறது என யதார்த்தமான நிலையை விவரிப்பர்.

வேறு சிலர் திடீரென்று உறக்கம் கலைந்து கண்விழித்து விடுவார்கள். இதுபோன்ற தருணங்களில் ஒவ்வொருவரும் மீண்டும் உறங்குவதற்கான முயற்சிகளை வெவ்வேறு வடிவங்களில் மேற்கொள்கிறார்கள். ஆனால் இந்த விடயத்தில் எம்முடைய வைத்திய நிபுணர்கள் பின்வரும் விடயங்களை பின்பற்றினால் உறக்கம் தொடர்பான இடையூறு நீங்கி, உறக்கம் தொடர்பான பழக்கம் மீண்டும் ஏற்படும் என குறிப்பிடுகிறார்கள்.

நடு இரவில் உறக்கம் தொலைந்து கண் விழித்தால் உங்களது வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்து சில புத்தகங்களை வாசிக்கலாம். மெல்லிசையை மெல்லிய ஒலியில் கேட்கலாம். இதற்கென வடிவமைக்கப்பட்டிருக்கும் சில பிரத்யேக தியான முத்திரைகளையோ அல்லது யோகாசன முத்திரைகளையோ பாவிக்கலாம். இதன் காரணமாக உங்களுக்கு உறக்கம் மீண்டும் ஏற்படும். அதனைத் தொடர்ந்து ஆரோக்கியமான உறக்கமும் கிடைக்கும்.

வைத்தியர் ஜெயராமன்

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects