எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை இன்றியும் வாக்கினைப் பதிவு செய்ய முடியும் என்று மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்பரமணியம் அச்சுதன் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புகின்றவர்கள் மாத்திரம் அன்றி, உள்நாட்டிலேயே வசிக்கின்றவர்களும் வாக்காளர் அட்டை இன்றி வாக்களிக்க முடியும்.
வாக்காளர் அட்டை என்பது வாக்காளர்கள் தாங்கள் வாக்களிக்க வேண்டிய தொகுதியை அடையாளம் காண்பதற்கும் வாக்குச்சாவடியில் தமது தொடரிலக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்குமே வழங்கப்படுகிறது.
வாக்காளர் அட்டை கிடைக்கப் பெறாதவர்கள் தங்களது அடையாள அட்டையை அல்லது அங்கீகரிக்கப்பட்ட சட்டரீதியான அடையாள ஆவணங்களைக் காண்பித்து வாக்கினைப் பதிவு செய்ய முடியும்.
அதேநேரம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்துக்குப் பிரவேசித்து, தமது அடையாள அட்டை இலக்கத்தை வழங்கி தமது உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையின் பிரதியையும் பெற்றுக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வழிகளில் வாக்காளர்கள், வாக்காளர் அட்டையின்றியே வாக்களிப்பதற்கான வசதிகள் இருப்பதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்ரமணியம் அச்சுதன் தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇