கிழக்குப் பல்கலைக்கழகப் பட்டப்பின் கற்கைகள் பீடத்தின் முதல் பீடாதிபதியாக பேராசிரியர் ஜீவரெத்தினம் கென்னடி கடந்த 01.03.2024 அன்று பதவியேற்றுள்ளார்.
கடந்த வருடம் ஜனவரி மாதம் இப்பீடத்தினைத் தொடங்குவதற்கான அனுமதிக்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியாகி, பெப்ரவரி மாதம் 1ம் திகதி 2023ஆம் ஆண்டு இப்பீடம் திறந்துவைக்கப்பட்டது.
அதன் பின்னர் அப்பீடத்திற்கான பீடாதிபதிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு அதற்கான நேர்முகத்தேர்வுகள் இடம்பெற்று, கிழக்குப்பல்கலைக் கழக மூதவையினால் அங்கிகரிக்கப்பட்டுப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
பட்டப்பின் கற்கைகள் பீடத்தின் முதல் பீடாதிபதியின் நியமனமானது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் ஜீவரெத்தினம் கென்னடி கடந்த 26 வருடங்களாக பல்கலைக்கழகச் சேவையிலே ஈடுபட்டு வருவதுடன் பலவகையான பதவிகளையும் வகித்துள்ளார்.
கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றில், பட்டப்பின் கற்கைகள் பீடத்தின் முதல் பீடாதிபதி பேராசிரியர் ஜீவரெத்தினம் கென்னடி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇