2024 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் வரி வருவாய் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 28.5% அதிகரித்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இன்று (12) விடுத்துள்ள அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி முதல் ஓகஸ்ட் இறுதி வரை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 1,229,245 மில்லியன் ரூபா வரி வருமானத்தை ஈட்டியுள்ளது.
எவ்வாறாயினும், கடந்த வருடம் இந்த காலப்பகுதியில் 956,418 மில்லியன் ரூபாவை சேகரிக்க முடிந்தது.
பெருநிறுவன மற்றும் இணைக்கப்படாத வருமான வரி, மதிப்பு கூட்டு வரி, சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி, பந்தயம் மற்றும் சூதாட்ட வரி, பங்கு பரிவர்த்தனை வரி மற்றும் பிற வரிகள் போன்ற பல வகையான வரிகளின் கீழ் உள்நாட்டு வருவாய் திணைக்களம் இந்த வரிகளை வசூலித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇