உலகின் முன்னணி கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) தனது அனைத்து சமூக வலைத்தளங்களிலும் சேர்ந்து 1 பில்லியன் பின்தொடர்பவர்களைப் (followers) பெற்றுள்ளார்.
சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் மற்றும் யூடியூப் ஆகியவற்றில் மொத்தமாக இவர், 1 பில்லியன் பின்தொடர்பவர்களைப் பெற்றுள்ளார்.
இந்தச் சாதனை மூலம் ரொனால்டோ, சமூக ஊடக வலைத்தளங்களில் 1 பில்லியன் பின்தொடர்பவர்களைக் கடந்த உலகின் முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரொனால்டோ, உலகின் மிகப்பெரிய இடத்திற்கு உயர்ந்துள்ளதாகக் கருதுகிறேன்.
நான் எப்போதும் எனது குடும்பத்திற்காகவும் உங்களுக்காகவும் தான் விளையாடி உள்ளேன்.
என்னை நம்பி ஆதரவளித்த அனைவருக்கும் எனது நன்றி என இரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
இதேவேளை அண்மையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்து உலகில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇