2019 / 2020 ஆம் ஆண்டு ஆய்வு வெளியீடுகளுக்கான விருது வழங்கும் நிகழ்வு விஞ்ஞான ஆராய்ச்சிக்கான ஜனாதிபதி விருதுகள் தேசிய ஆராய்ச்சி சபையின் ஏற்பாட்டில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 21.11.2023 அன்று இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் இருந்து விஞ்ஞான ஆய்விற்கான ஜனாதிபதி விருதினை கணிதப் பேராசிரியர் எஸ்.திருக்கணேஷ், பெளதீகவியல் பேராசிரியர் சி.ராகல் மற்றும் முனைவர் ஆர்.என்.நஷீஹா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
கணிதப் பேராசிரியர் திருக்கணேஷ் அவர்களுக்கு 2019 இற்கு ஒரு விருதும், 2020 இற்கு 2 விருதுகளும் கிடைக்கப்பெற்றன.
பெளதீகவியல் பேராசிரியர் சி.ராகல் 2019 ஆம், 2020 ஆம் ஆண்டுகளுக்கு தலா ஒரு விருதும் மற்றும் முனைவர் ஆர்.என்.நஷீஹா 2020 இற்கு ஒரு விருதினையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇