மேல் மாகாணத்தில் வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் வழங்கும் அனைத்து பிரிவுகளும் எதிர்வரும் 20ஆம் திகதி மூடப்படும் என மேல் மாகாண சபை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலின் போது தேர்தல் கடமைகளுக்காக உத்தியோகத்தர்களை விடுவிக்க வேண்டியிருப்பதன் காரணமாக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் பெற வேண்டிய வாகனங்களுக்கு அபராதமின்றி உரிமம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇