இன்ஸ்டாகிராமில் இளைஞர்களால் அதிகம் விரும்பப்படும் அழகு வடிப்பான்கள் (Beauty filters) குறித்து மெட்டா நிறுவனம் முக்கிய முடிவை எடுத்துள்ளது.
இன்ஸ்டாகிராம் மூலம் பலர் புகைப்படங்கள், வீடியோக்கள், ரீல்களை வெளியிட்டு பிரபலமடைந்துள்ளனர். தற்போது இன்ஸ்டாகிராமிற்கு சொந்தமான மெட்டா நிறுவனம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
அதாவது, பியூட்டி ஃபில்டர்களைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட புகைப்படங்கள் யதார்த்தத்திலிருந்து மிகவும் வேறுபட்டவை. இந்நிலையில், இன்ஸ்டாகிராம் நடத்திய ஆய்வில் இது குறித்த சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆய்வில், பியூட்டி ஃபில்டர்கள் கொண்ட இந்த படங்கள் பெண்களின் மன ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த அம்சம் ஜனவரி 2025 முதல் முற்றிலும் நிறுத்தப்படும் என மெட்டா அறிவித்துள்லது.
இன்ஸ்டாகிராமில் எந்த புகைப்படத்தையும் வெளியிடும் போது, பியூட்டி ஃபில்டர்களைப் பயன்படுத்தி அதை அழகாகக் காட்டலாம். ஆனால் இப்போது மெட்டா இந்த பியூட்டி ஃபில்டர்களை தடை செய்துள்ளது. மூன்றாம் தரப்பு ஆக்மென்டட் ரியாலிட்டி பியூட்டி ஃபில்டர்கள் இனி இன்ஸ்டாகிராமில் தோன்றாது. இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பில் பயனர்களால் உருவாக்கப்பட்ட 20 லட்சத்திற்கும் அதிகமான வடிப்பான்கள் நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புகைப்படத்தை பதிவிடும் போது மூன்றாம் தரப்பு பியூட்டி ஃபில்டர்களைப் பயன்படுத்துவதன் மூலம் புகைப்படத்தை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றலாம். இது எப்போதும் உண்மைக்கு அப்பாற்பட்டது என பலர் குற்ரம் சாட்டி வருகினறனர். இதுமட்டுமின்றி, பலர் இது குறித்து அதிருப்தியும் தெரிவித்தனர். ஆனால் ஏராளமான பயனர்கள் இந்த பியூட்டி ஃபில்டர்களைப் பயன்படுத்தி தங்கள் படங்களை இன்னும் அழகாக வெளியிட்டு வந்தனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇