நாட்டின் 5 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் சத்தியபிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் அவர்கள் 25.09.2024 அன்று பிற்பகல் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி மத்திய மாகாணத்திற்கான புதிய ஆளுநராக பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சரத் அபேகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வடமாகாண புதிய ஆளுநராக, யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேநேரம், தென் மாகாணத்திற்கான புதிய ஆளுநராக முன்னாள் சிரேஸ்ட அரச நிர்வாக அதிகாரி பந்துல ஹரிச்சந்திரவும், சப்ரகமுவ மாகாணத்துக்கான புதிய ஆளுநராக சம்பா ஜானகி ராஜரத்னமும் நியமனம் பெற்றுள்ளனர்.
வட மத்திய மாகாணத்துக்கான புதிய ஆளுநராக திஸ்ஸ குமாரசிறியும் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇