சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை மீளாய்வு செய்வதற்காக அதன் ஆசிய – பசுபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் தலைமையிலான குழு நாட்டுக்கு வரவுள்ளது.
இதன்போது சர்வதேச நாணய நிதியத்திற்கான நீடிக்கப்பட்ட நிதி வசதியின் மூன்றாம் தவணைக் கொடுப்பனவை வழங்குவது தொடர்பில், இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகள், நிதியமைச்சின் அதிகாரிகள் மற்றும் புதிய அரசாங்கத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் அக் குழு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளது.
இந் மாதத்தின் ஆரம்பத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நாட்டு வருகைதந்திருந்த நிலையில், நாட்டில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் காரணமாக அவர்களின் விஜயம் பிற்போடப்பட்டிருந்தது.
அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு, நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நிலைமை தொடர்பில் ஆராயவுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇