மஹாராஷ்டிராவின் நாக்பூரில் அமைக்கப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மஹாராஷ்டிராவின் நாக்பூரில் இந்திய மதிப்பில் ரூபாய் 573 கோடி செலவில் சுமார் 5.6 கிலோமீற்றர் தூரத்திற்கு இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆசியாவின் மிக நீளமான ஈரடுக்கு மேம்பாலம் என்ற பெருமையைப் பெற்றுள்ள நாக்பூர் மேம்பாலம், இந்தியாவின் உட்கட்டமைப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
இந் நிலையில், மிக நீளமான ஈரடுக்கு மேம்பாலம், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()









