பெரிய மூக்கு கொண்ட பூனை ஒன்று வடக்கு அயர்லாந்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இப் பூனையின் பெயர் பார்னி பப்பிள் என அழைக்கப்படுகிறது.
வடக்கு அயர்லாந்தில் உள்ள பூனை மீட்பு தொண்டு நிறுவனத்தில் பார்னி வசிக்கிறது.
பூனையின் மூக்கின் அளவைப் பார்த்து அதிர்ச்சியாக இருந்தது என்று ‘ரெஸ்கியூ கேட்ஸ் என்ஐ’ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த லின்சி ஜோன்ஸ் கூறினார்.
பூனை முற்றிலும் நலமாக இருப்பதாகத் தெரிகிறது. மிகவும் நன்றாக சாப்பிடுகிறது. அதன் மூக்கிலிருந்து திரவம் எடுக்கப்பட்டு, பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. அதில் புற்றுநோய் அறிகுறி எதுவும் இல்லை.” என்று கூறினார்.
“கிரிப்டோகாக்கஸ் தொற்று என்ற ஒன்று உள்ளது. அதற்காக மருந்து அளிக்கப்படுகிறத என்றும் ஏழு நாட்கள் மருந்து கொடுப்போம், பிறகு ஏழு நாட்கள் நிறுத்திவைப்போம், வித்தியாசம் இருப்பதாகவும் இது மிகவும் அமைதியான சிறு பூனயும், தனித்துவமான குணமுடையது.” என்றும் அவர் கூறினார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










