இன்ஃப்ளூவன்ஸா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதனால், கொவிட் -19 தொற்றின் போது கடைப்பிடிக்கப்பட்ட சுகாதார பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபர்கள் மத்தியில் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்து காணப்படுவதாக குழந்தை நல மருத்துவ ஆலோசகர் வைத்தியர் லக்குமார் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் முகக்கவசங்களை அணிய வேண்டும் எனவும் கை சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் குறிப்பாக பொது போக்குவரத்து மற்றும் சமூக கூட்டங்களின் போது சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
மேலும் பாடசாலைகள், குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களில் இந்த வைரஸ் பரவுவதற்கான சூழ்நிலைகள் அதிகமாக காணப்படுவதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் உடல்நிலை தொடர்பில் எப்போதும் அவதானமாக இருக்குமாறும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கு ஏதேனும் நோய் அறிகுறிகள் தென்பட்டால் அவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதை தவிர்க்குமாறும் வைத்தியர் பெர்னாண்டோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇