கொள்கை வட்டி வீதங்களை மாற்றமின்றி தொடர்ந்தும் ஒரே மட்டத்தில் பேண இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
இதற்கமைய துணைநில் வைப்பு வசதி வீதம் 8.25 சதவீதமாகத் தொடர்ந்தும் பேணப்படவுள்ளது.
அத்துடன் துணைநில் கடன் வசதி வீதம் 9.25 சதவீதமாக மாற்றமின்றி பேணப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதேவேளை, உள்ளூர் சந்தையிலிருந்து கணிசமான டொலர்களை மத்திய வங்கி கொள்வனவு செய்ததன் ஊடாக உத்தியோகபூர்வ கையிருப்பு கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் 6 பில்லியின் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.