இலங்கை மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 38,240 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜூலை மாதத்தில் 35,232 வாகனங்கள் பதிவுசெய்யப்பட்டிருந்த நிலையில், முச்சக்கர வண்டிகள், உந்துருளிகள் மற்றும் SUV ரக வாகனங்களின் விற்பனையில் ஏற்பட்ட அதிகரிப்பால் ஆகஸ்ட் மாதத்தில் முந்தைய மாதத்தை காட்டிலும் வாகன பதிவு அதிகரித்துள்ளது.

ஜூலை மாதத்தில் 454 முச்சக்கரவண்டிகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், ​ஆகஸ்ட் மாதத்தில் முச்சக்கர வண்டி பதிவுகள் 2,497 ஆக அதிகரித்துள்ளன.

அதேநேரம், ஜூலை மாதத்தில் 26,171 உந்துருளிகள் பதிவாகியிருந்ததுடன், ஆகஸ்ட் மாதத்தில் 27,585 உந்துருளிகள் பதிவாகியுள்ளன.

இருப்பினும், ஜூலை மாதத்தில் சிற்றூந்துகளின் பதிவுகள் 2,748 அலகுகளிலிருந்து மாதத்தில் 2,329 அலகுகளாக குறைந்துள்ளன.

இதேவேளை, புத்தம் புதிய மகிழுந்துகளில் BYD ரக மின்சார வாகனங்களின் பதிவுகள் அதிகரித்துள்ளது.

கடந்த ஜூலையில் 244 வாகனங்களும் ஆகஸ்ட் மாதத்தில் 354 வாகனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஜூலை மாதத்தில் 3,299 அலகுகளாக இருந்த SUV ரக வாகனங்களின் பதிவுகள் ஓகஸ்ட் மாதத்தில் 3,808 அலகுகளாக கடுமையாக உயர்ந்துள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects