பல்கலைக்கழகங்களுக்கு புதிய விரிவுரையாளர்களை இணைத்துக் கொள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுடன் கலந்துரையாடிய பின்னர் இதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக அதன் தலைவர் பேராசிரியர் கபில செனவிரத்ன தெரிவித்தார்.
புதிய விரிவுரையாளர்களை இணைத்துக்கொள்வது தொடர்பில் 2 சுற்றுக் கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளன.
தற்போது வெற்றிடமாகவுள்ள விரிவுரையாளர்களில் 50 வீதமானவர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு இதன்போது இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறியமையினால் இவ்வாறு வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன.
புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள மருத்துவ பீடங்களில் கற்பிப்பதற்கான விரிவுரையாளர்கள் இல்லை எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇