மட்டக்களப்பு செங்கலடி விவேகானந்தா பாடசாலையில் இருந்து, மாகாண மட்ட மற்றும் தேசிய மட்ட ரோபோட்டிக் புத்தாக்கப் போட்டிகளில் பங்கேற்ற,மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் கே.சந்திரகுமார் தலைமையில் அண்மையில் நடைபெற்றது .
நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை சமூகத்தினர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
.
மாகாண மட்டத்தில் நடாத்தப்பட்ட புத்தாக்கப் போட்டியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட, செங்கலடி விவேகானந்தா பாடசாலை மாணவர்கள் நால்வர் தேசிய மட்டப் போட்டியில் பங்குபற்றியிருந்தனர்.
அந்த வகையில் கே.வி.பவிலாஷ் எனும் மாணவன் ‘போஸ்ட் பொக்ஸ் இன்டிக்கேட்டரைக்’ கண்டுபிடித்தமைக்காக தேசிய நிலையில் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தைச் சுவீகரித்தார்.
புத்தாக்கத் திறனை வெளிப்படுத்திய மாணவர்கள் பாடசாலை சமூகத்தால் கௌரவிக்கப்பட்டனர்.
2022ம் ஆண்டிற்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில், செங்கலடி விவேகானந்தா பாடசாலை 92 வீத சித்தி வீதத்தைப் பதிவு செய்த நிலையில், பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்டவர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇