எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்று முதல் (01.10.2024) ஆரம்பமாகவுள்ளது.
இப் பணிகள் எதிர்வரும் 8ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந் நிலையில், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அஞ்சல் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பித்த அனைவரும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக மீண்டும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, தகுதியான அனைத்து விண்ணப்பதாரிகளும், விண்ணப்பங்களை எதிர்வரும் 8ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக தமது மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியிடம் கையளிக்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇