இலங்கையின் ஏற்றுமதி செயற்திறன் கடந்த மாதம் 1165.4 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
இலங்கை சுங்கத்தினால் வெளியிடப்பட்ட தரவுகளுக்கமைய, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபை இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் ஒகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த செயற்திறனானது 4.18 சதவீத வளர்ச்சியாகுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆடை மற்றும் புடவை, தேயிலை, இறப்பர் பொருட்கள், தேங்காய் பொருட்கள், மசாலா பொருட்கள் மற்றும் செறிவூட்டப்பட்ட பொருட்களின் ஏற்றுமதி காரணமாக இவ்வாறானதொரு வளர்ச்சிநிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇