2023 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதரப் சாதாரணதரப் பரீட்சையின் முடிவுகளின் படி மட்டக்களப்பு மாவட்டத்தின் 5 வலயங்களில் இருந்து 8360 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.
இவர்களில் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 2022 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 162 மாணவர்கள் 9A சித்திகளைப் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
அத்துடன் 1638 மாணவர்கள் 3C – 3S சித்தியைப் பெற்று, 81.01 வீதத்திலும் மற்றும் 1778 மாணவர்கள் 3C – 2S பெற்று 87.93 வீதத்திலும் சித்திபெற்றுள்ளனர்.
பட்டிருப்பு கல்வி வலயத்தில் 1498 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 997 மாணவர்கள் 3C – 3S பெற்று 66.56 வீதத்திலும் மற்றும் 1125 மாணவர்கள் 3C – 2S பெற்று 75.10 வீதத்திலும் சித்திபெற்றுள்ளனர்.
கல்குடா கல்வி வலயத்தில் 1575 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 1031 பேர் 3C – 3S பெற்று 65.46 வீதத்திலும் மற்றும் 1136 மாணவர்கள் 3C – 2S பெற்று 72.13 வீதத்திலும் சித்திபெற்றுள்ளனர்.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் 2387 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 1716 பேர் 3C – 3S பெற்று 71.89 வீதத்திலும் மற்றும் 1922 மாணவர்கள் 3C – 2S பெற்று 80.52 வீதத்திலும் சித்திபெற்றுள்ளனர்.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் 878 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 602 மாணவர்கள் 3C – 3S பெற்று 68.58 வீதத்திலும் மற்றும் 686 மாணவர்கள் 3C – 2S பெற்று 78.13 வீதத்திலும் சித்திபெற்றுள்ளனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇