ஐசிசி மகளிர் T20 உலகக்கிண்ண தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (3) ஆரம்பமாகிறது.
இன்றைய முதலாவது போட்டியில் ஸ்கொட்லாந்து அணி பங்களாதேஷ் அணியை எதிர்கொள்கிறது.
மேற்படி போட்டியானது இலங்கை நேரப்படி பி.ப 3.30 மணிக்கு சார்ஜாவில் நடைபெறுகிறது.
இதேவேளை, இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள மற்றுமொரு போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
குறித்த போட்டியும் சார்ஜா மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2024 மகளிர் T20 உலகக் கிண்ணப்போட்டிகளில் 10 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, குழு A இல் அவுஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
B குழுவில் பங்களாதேஸ், இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அதற்கைமைய, ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் ஒக்டோபர் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் அரையிறுதிக்கு தகுதிப்பெறவுள்ளன.
இறுதிப்போட்டி ஒக்டோபர் 20ஆம் திகதி டுபாய் சர்வதேச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇