இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் நாளை இலங்கை வரவுள்ளார்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரக தகவல்கள் இதனைத் தெரிவித்துள்ளன.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் இலங்கை வருகின்ற 1ஆவது வெளிநாட்டு இராஜதந்திரியாக இந்திய வெளிவிவகார அமைச்சர் பார்க்கப்படுகிறார்.
அவர் தமது விஜயத்தின் போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடனும், அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
இதன்போது கடந்த காலங்களில் இந்திய – இலங்கை கூட்டு முயற்சியில் ஆரம்பிக்கப்பட்ட மற்றும் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பாகக் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇