மட்டக்களப்பு புனித ஜோசப் விசேட கல்வி நிலையத்தில் 10 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு விற்பனைக் கண்காட்சி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பு புனித ஜோசப் விசேட கல்வி நிலையத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் விற்பனைக் கண்காட்சியும் மட்டக்களப்பில் இடம்பெற்றது.

“இயலாமை என்பது இயலாமை அல்ல” வாரீர் எம் சிறப்பு திறன் பிள்ளைகளின் செயல்களைப் பாரீர் ஊக்கப்படுத்துவீர் எனும் கருப்பொருளில் மட்டக்களப்பு புனித ஜோசப் விசேட கல்வி நிலையத்தின் அதிபர் எம்.ஏ.பரீஸ்கரன் தலைமையில் இடம் பெற்றது.

நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புனித ஜோசப் விசேட கல்வி நிலையமானது விசேட தேவையுடைய பிள்ளைகளைக் கொண்டு அதிபர் பரீஸ்கரன்தலைமையில் ஆரம்பிக்கப்பட்டு பத்து வருடம் நிறைவுற்ற நிலையில் நிலையத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் கல்வி நிலைய ஆசிரியர்களின் ஒன்றிணைந்த செயற்பாடு மற்றும் பங்களிப்புடன் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் மரக்கன்றுகள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டதுடன் விற்பனையும் செய்யப்பட்டது.

இந்நிகழ்விற்கு விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வர் அருட் பணி ஜோர்ஜ் ஜீவராஜ் அடிகளார், அருட்தந்தை இன்னாசி ஜோசப் அடிகளார், அருட் சகோதரிகள், அருட் சகோதரர்கள், அயல் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், மாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் விசேட கல்வி நிலைய மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects