விவசாய கால்நடை அபிவிருத்தி மிருகவள  நீர்ப்பாசன அமைச்சருக்கும் இலங்கைக்கான அமெரிக்க உயர் ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

வன விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களை குறைப்பதற்கு தேவையான ஆலோசனை வழிகாட்டல் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை அமெரிக்காவிலிருந்து பெற்றுக்கொள்ள பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டதாக விவசாய கால்நடை அபிவிருத்தி மிருகவள  நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்தர். 

ஊடகங்களுக்கு அவர் இன்று (19.12.2024) இது பற்றி மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கைக்கான அமெரிக்க உயர் ஸ்தானிகர் ஜூலி சங் உடன் தாம் பேச்சுவார்த்தைகள் நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார். 

இது தொடர்பான தொழில்நுட்ப ஆலோசனைகள் அமெரிக்காவில் இருந்து பெற்றுக்கொள்ளப்படும்  என்றும் கூறினார்.

தேசிய விவசாய அமைப்புக்கள் தொடர்பான எண்ணக்கருக்களை முன்னெடுத்து தேசிய உற்பத்திக்கான சர்வதேச சந்தை வாய்ப்புக்கள் உருவாக்குதல் தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

தெங்கு தொடர்பான உற்பத்திகள் மற்றும் தேங்காய்ப்பால் போன்றவற்றை நவீன முறையில் பதப்படுத்துவது தொடர்பாகவும் பேச்சுவார்த்தைகள் நடத்தியதாக அவர் தெரிவித்தார். 

இதன் காரணமாக உள்ளூர் விவசாயிகளது எதிர்காலம் சிறப்பாக அமைய வழி பிறக்கும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects