நவநாகரிக இளம் பெண்கள் விரும்பும் பளபளப்பான சரும பொலிவு சாத்தியமா?
இன்றைய திகதியில் பாடசாலைக்கு செல்லும் பெண்களும், கல்லூரியில் உயர்கல்வி கற்கும் இளம் பெண்களும், கொர்பரேட் நிறுவனத்தில் பணியாற்றும் இளம் பெண்களும் தங்களுடைய முக தோற்றப் பொலிவில் சமரசம் செய்து கொள்வதில்லை.
மேலும் இவர்கள் தற்போது கொரிய பெண்களின் முக தோற்றத்தில் உள்ள பளபளப்பான சரும பொலிவினை பெற வேண்டும் என விரும்புகிறார்கள்.
இது தொடர்பாக அழகியல் சிகிச்சை நிபுணர்களையும், தோல் சிகிச்சை நிபுணர்களையும் இவர்கள் அணுகி ஆலோசனை மேற்கொள்கிறார்கள்.
இந்நிலையில் தெற்காசிய நாட்டினை சேர்ந்த எம்முடைய இளம் பெண்களின் முகத்தோற்றம் மற்றும் சருமம் கொரிய நாட்டு இளம் பெண்களின் முகத்தோற்றம் மற்றும் சருமத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது.
எம்முடைய சருமம் ஏழடுக்கினை கொண்டது. கொரிய நாட்டு பெண்களின் சருமம் பல அடுக்கினை கொண்டதாக இருந்தாலும், அவற்றின் அடர்த்தியும் நீர்ச் சத்தும் வேறாக இருப்பதால் எம்முடைய இளம் பெண்கள் ஒருபோதும் அந்த நாட்டு இளம் பெண்களின் பெண்களைப் போல் பளபளப்பான சரும பொலிவினை பெற இயலாது.
மேலும் அவர்களின் தோலில் அடிப்பகுதியில் உள்ள செல்களின் இயங்குத் திறன் மற்றும் செயல்பாட்டு திறன் வேறு வகையினதான பாரம்பரிய மரபணுவை சார்ந்தது என்பதனையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
மேலும் எம்முடைய தோலின் அடிப்பகுதியில் உள்ள செல்களின் அடர்த்தி வேறுபாட்டால் பிரதிபலிக்கும் திறன் என்பது குறைவு.
ஆனால் கொரிய நாட்டு பெண்களின் தோளில் உள்ள செல்களின் செயல்பாட்டால் பிரதிபலிக்கும் திறன் அதிகம் என்பதால் அவர்களுடைய சருமம் பளபளக்கிறது.
இந்த மருத்துவ ரீதியிலான அடிப்படை உண்மையை இளம் பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இதன் காரணமாகவே அந்நாட்டு இளம்பெண்கள் போன்ற பளபளக்கும் சருமம் தெற்காசிய நாட்டு இளம் பெண்களுக்கு கிடைக்காது.
அதனால் அது தொடர்பான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்துக்கிறார்கள்.
இதையும் கடந்து அங்கு பயணித்து இது தொடர்பான ஏதேனும் முயற்சிகளை மேற்கொண்டால் இதன் காரணமாகவே பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்றும் வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
வைத்தியர் தீப்தி
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇