மீண்டும் ஆரம்பமாகும் பாடசாலை கல்வி நடவடிக்கைகள்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இந்த ஆண்டுக்கான அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் இன்று (01.04.2025) ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

முதலாம் பாடசாலை தவணையின் முதல் கட்டம் கடந்த 14ஆம் திகதி முடிவடைந்தது.

எவ்வாறாயினும், ரமலான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு இன்றைய தினம் விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்திருந்தது.

இதற்கிடையில், இந்த நாட்களில் குழந்தைகளிடையே சின்னம்மை நோய் பரவுவது குறித்து பெற்றோர்கள் கவனம் செலுத்துமாறு சுகாதாரத் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

குழந்தை நோய் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா குறிப்பிடுகையில், அத்தகைய நோய் அறிகுறிகள் உள்ள குழந்தைகள் இருந்தால், அவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என தெரிவித்தார்.

அதேபோன்று , இந்த நாட்களில் நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக, தண்ணீர் பருகுவது மிகவும் முக்கியம் என விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா மேலும் தெரிவித்தார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects