மீன்மகள் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் அனா கத்லின் கென்னடியின் தயாரிப்பிலும், கோடீஸ்வரனின் இயக்கத்திலும் உருவாகிவரும் புதிய திரைப்படத்திற்கு “கூட்டாளி” எனப் பெயரிடப்பட்டு அப்பெயரை உதியோகபூர்வமாக வெளியிடும் நிகழ்வு 07-10-2024 அன்று மட்டக்களப்பு கோட்டைப்பூங்காவில் நடைபெற்றது.
சிறுவர்களையும், இசையையும் மையமாகக்கொண்டு இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளதாகவும், மட்டக்களப்பின் வர்த்தக சினிமா வரலாற்றில் மற்றுமொரு மைல்கல்லாக இத்திரைப்படம் திகழும் எனவும் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் படத்தில் நடித்த சிறுவர்கள், அவர்களது பெற்றோர்கள், ஏனைய நடிகர்கள், சினிமா ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டதுடன் கூட்டாளி எனப் பெயரிடப்பட்டதற்கான காரணம் உட்பட இப்படத்தின் இசை வெளியீடு தொடர்பாகவும் இயக்குநர் கருத்துத் தெரிவித்தார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇