கடந்த சில நாட்களாக 2,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கரட் தற்போது 200 ரூபாவாக குறைவடைந்துள்ளது.
இந்நிலையில், ஒரு கிலோ தக்காளி 70 ரூபாவாக குறைவடைந்துள்ளது.
கண்டி கட்டுகஸ்தோட்டை மெனிக்கும்புர பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (26.04.2024) ஒரு கிலோ கரட் 200 ரூபாவாகவும், ஒரு கிலோ லீக்ஸ் 180 ரூபாவாகவும், ஒரு கிலோ வெங்காயத்தாள் 230 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.
அத்துடன், ஒரு கிலோ தக்காளி 70 ரூபாவாகவும், ஒரு கிலோ முட்டைக்கோஸ் 80 ரூபாவாகவும், ஒரு கிலோ கத்தரிக்காய் 100 ரூபாவாகவும், ஒரு கிலோ பீன்ஸ் 150 ரூபாவாகவும், ஒரு கிலோ பயற்றங்காய் 70 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.
ஒரு கிலோ புடலங்காய் 90 ரூபாவாகவும், ஒரு கிலோ பச்சை மிளகாய் 200 ரூபாவாகவும், ஒரு கிலோ வெண்டைக்காய் 160 ரூபாவாகவும், ஒரு கிலோ முருங்கைக்காய் 450 ரூபாவாகவும், ஒரு கிலோ கறி மிளகாய் 230 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.
ஒரு கிலோ தேசிக்காய் 900 ரூபாவாகவும், ஒரு கிலோ இஞ்சி 2,600 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.
இதேவேளை, ஒரு கிலோ பீட்ரூட் 220 ரூபாவாகவும், ஒரு கிலோ வாழைக்காய் 110 ரூபாவாகவும், ஒரு கிலோ முள்ளங்கி 80 ரூபாவாகவும், ஒரு கிலோ பெரிய வெங்காயம் 230 ரூபாவாகவும், ஒரு கிலோ சின்ன வெங்காயம் 280 ரூபாவாகவும், ஒரு கிலோ உள்நாட்டு உருளைக்கிழங்கு 150 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇