வியர்வை துர்நாற்றத்தை நீக்கும் எளிய வழிகள்…..
காற்று உட்புகாத ஈரப்பதமான உறுப்புகள் வியர்வையால் மேலும் துர்நாற்றத்தை உண்டாக்குகின்றன. அதாவது அக்குள் பகுதியில் அதிக வியர்வை சுரக்கும். அதிகப்படியாக வியர்த்தல் மிகவும் சங்கடமாக மாறும், ஆனால் அது தவிர்க்க முடியாதது.
வியர்வை பெரும்பாலானோருக்கு பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. கோடை காலத்தில் குளித்தாலும் வியர்வை சுரப்பு அதிகம் இருப்பதால் ஒரு வித துர்நாற்றத்தால் அவதிப்படுவார்கள்.
இந்த நாற்றம் உடலில் சுரக்கும் ஒரு வித சுரப்பிகளில் இருந்து வெளிப்படுகிறது. உடலில் உள்ள கெட்ட பெக்டீரியாக்கள் இணைந்து கடுமையான நாற்றத்தை உண்டாக்குகிறது. காற்று உட்புகாத ஈரப்பதமான உறுப்புகள் வியர்வையால் மேலும் துர்நாற்றத்தை உண்டாக்குகின்றன.
அதாவது அக்குள் பகுதியில் அதிக வியர்வை சுரக்கும். அதிகப்படியாக வியர்த்தல் மிகவும் சங்கடமாக மாறும், ஆனால் அது தவிர்க்க முடியாதது. இதனை எளிதான வீட்டு வைத்தியங்கள் மூலம் சரி செய்யலாம், அவை என்ன என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
தக்காளி வியர்வை துர்நாற்றத்தை அகற்ற உதவுகிறது. தக்காளி ஜூஸ் தினமும் அருந்தி வருவது மட்டுமின்றி அதனை அக்குள் பகுதிகளிலும் அப்ளை செய்யலாம். இதற்கு நன்றாக பழுத்த தக்காளியை மசித்து அக்குளில் தடவி அரை மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். இதனை அடிக்கடி செய்து வந்தால் விரைவில் அக்குள் வியர்வை சரியாகும்.
பேக்கிங் சோடா வியர்வையை உறிஞ்சும் தன்மை பெற்றது. 1/2 கப் சோள மாவு, 1/2 கப் சமையல் சோடா மற்றும் அத்தியாவசிய எண்ணெய் சில துளிகளை எடுத்து நன்கு கலக்கி கொள்ளுங்கள். இந்த கலவையை அக்குள் பகுதியில் தடவி உலரவிட்டு கழுவவும். அக்குள்களை சுத்தம் செய்ய இந்த முறை உதவும்.
மஞ்சள் தூள் ஒரு சிறந்த கிருமி நாசினி, இதனுடன் தயிர் கலந்து பயன்படுத்தும் போது வியர்வை சுரப்பியில் இருக்கும் கெட்ட பெக்டீரியாக்ளை அழித்து வாடையைக் குறைக்கும். தினமும் குளிப்பதற்கு முன்பு கெட்டித்தயிருடன், மஞ்சள் தூள், ஜவ்வாது கலந்து நன்றாக குழைத்து அக்குளில் பூசி அரை மணி நேரம் கழித்து குளிக்கவும். இப்படி செய்து வந்தால் துர்நாற்றம் மறையும்.
அக்குளில் கடலை மாவு, பாசிப்பருப்பு மாவை தேய்த்து குளித்துவரவும். வாரம் இரண்டு முறை இதனை செய்து வந்தால் விரைவில் வாடை மறையும்.
வேப்பிலை வியர்வை துர்நாற்றத்தை நீக்குவது மட்டுமின்றி, கிருமிகளை அழிக்கவும் பயன்படுத்துகிறது. வேப்பிலையுடன், மஞ்சள் தூள் கலந்தும் பயன்படுத்தலாம்.
தளர்வான, பொருத்தமான வசதியான ஆடைகள் வியர்வையை தடுக்க உதவுகின்றன. இறுக்கமான ஆடைகளை அணிவது உங்கள் அக்குள் பகுதிகளில் அதிக வியர்வை சுரப்பை ஏற்படுத்தும். அதற்கு பதிலாக, தளர்வான துணிகளை அணிய முயற்சிக்கவும். மேலும் அவை உங்கள் துணிகளில் வியர்வை மற்றும் கறை படிவதைத் தடுக்க உதவும்.
நீங்கள் சாப்பிடும் உணவுகளும் அதிக வியர்வை சுரப்புக்கு காரணம் என்பது உங்களுக்குத் தெரியுமா? வியர்வை அக்குள்களைத் தூண்டக்கூடிய சில உணவுகள் மற்றும் பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை நீங்கள் தவிர்த்தால் வியர்வை சுரப்பு குறையும்.
இதற்கு ஆல்கஹால், பூண்டு மற்றும் வெங்காயம், அதிக கொழுப்பு உணவுகள், சூடான மற்றும் காரமான உணவுகள் போன்றவற்றை தவிர்த்து விடுங்கள்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇