தற்போது நிலவும் பலத்த மழை காரணமாக கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலை (Level-2) மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
அத்துடன், பதுளை, மாத்தளை, மொனராகலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு முதலாம் நிலை (Level-1) முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










