மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்கான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 04.10.2024 அன்று நடைபெற்றது. .
கிரிசலிஸ் நிறுவனத்தின் பங்களிப்புடன் சமூக நல்லிணக்கம், சமாதானம், பொருளாதாரத்தை வலுவடைய செய்வதனை நோக்காக கொண்டு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
மண்முனை வடக்கு பிரதேச செயலகம், கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகம் மற்றும் கிரான் பிரதேச செயலக பிரிவுகளில் ஆரம்பக்கட்டமாக மேற்கொள்ளப்படவுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் அவர்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்குமான செயற்திட்டத்தினை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்கான ஆரம்ப கலந்துரையாடல் இடம்பெற்றது.
இப்பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு இதன்போது உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது.
ஜப்பான் நாட்டின் நிதி அனுசானையின் கீழ் UN Women நிறுவனம் மற்றும் FISD நிறுவனமும் இணைந்து இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன் பால் நிலை சமத்துவத்தை நிலைநிறுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இக் கலந்துரையாடலின் போது உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணபன் ,கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ஜெயானந்தி திருச்செல்வம் , உதவி பிரதேச செயலாளர்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள் கிரிசலிஸ் நிறுவன திட்ட இணைப்பாளர் வினோபவன், பிராந்திய இணைப்பாளர் யூ எல் சம்சுதீன், திட்டமுகாமையாளர் ஜெகதீபன், சிரேஸ்ட திட்ட உத்தியோகத்தர் ஜவாகிர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇