நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக, பிரதான பொருளாதார மத்திய நிலையமான கெப்பட்டிபொல விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில நாட்களாகப் பல வகையான மரக்கறிகளின் விலை குறைந்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பிரதேசங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வெளியூர்களிலிருந்து வியாபாரிகளின் வருகை குறைவடைந்துள்ளதையும் , மரக்கறி தோட்டங்களுள்ள பகுதிகளில் நிலவும் மோசமான காலநிலையும் இதற்கு முக்கிய காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மழையால் பயிர்கள் நாசமாகி, அறுவடை செய்வதில் உள்ள சிரமமும் விலை வீழ்ச்சிக்குக் காரணம் என விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது கெப்பட்டிபொல விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விலையில், ஒரு கிலோ பீன்ஸ் 350 – 330 ரூபா வரையிலும், ஒரு கிலோ தக்காளி 180 – 200 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ கத்தரிக்காய் 50 முதல் 60 ரூபாய் வரையிலும், ஒரு கிலோ கேரட் 70 முதல் 75 ரூபாய் வரையிலும், ஒரு கிலோ முட்டைகோஸ் 50 முதல் 70 ரூபாய் வரையிலும், ஒரு கிலோ சோளம் 70 முதல் 80 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், வெண்டைக்காய் 120 – 130 ரூபாய் வரையிலும், ஒரு கிலோ கிழங்கு 60 – 70 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
உள்ளூர் உருளைக்கிழங்கு ஒரு கிலோ 180 – 200 ரூபா வரையிலும், ஒரு கிலோ முள்ளங்கி 60 – 70 ரூபா வரையிலும், ஒரு கிலோ பச்சை மிளகாய் 400 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇