எதிர்வரும் 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவிய மழையுடனான காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிப்புக்குள்ளான பகுதிகளை இலக்காகக் கொண்டு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கமைய, வெள்ளம் காரணமாக அதிக பாதிப்புகளை எதிர்கொண்ட கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் உள்ள 22 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை மையப்படுத்தி இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் அமல்படுத்தப்படுவதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனிடையே, நாடளாவிய ரீதியில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 41 ஆயிரத்து 212 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇