அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் நரம்புகளில் நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டத்தின்படி, அழகுசாதனப் பொருட்களில் இருக்கக்கூடிய பாதரசத்தின் அளவு ஒரு கிலோகிராம் ஒரு மில்லிகிராம் ஆகும்.
ஆனால் சருமத்தை வெண்மையாக்கும் அழகுசாதனப் பொருட்களில் அந்த வரம்பிற்கு மேல் பாதரசம் அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதன்காரணமாக தோல் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் இது போன்ற அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்தும்போது மிகவும் அவதானமாக செயற்படுமாறு சுகாதாரத் துறையினர் அறிவுறுத்துகின்றனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇