எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தத்தமது செலவின அறிக்கைகளைக் கைவசம் வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
அண்மையில் வெளியான வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் அனைத்து வேட்பாளர்களும், சுயேச்சை குழுக்களும், அரசியல் கட்சிகளும் செயற்பட வேண்டும்.
இல்லையெனில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க எச்சரித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇