சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அவுஸ்திரேலிய அணியின் மேத்யூ வேட் அறிவித்துள்ளார்.
2011 ஆம் ஆண்டு சர்வதேச அரங்கில் அறிமுகமான மேத்யூ வேட் அவுஸ்திரேலியா அணிக்காக 36 டெஸ்ட் போட்டிகள், 97 ஒருநாள் போட்டிகள் மற்றும் 92 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இவர் இறுதியாகக் கடந்த ஜூன் மாதம் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்றார்.
தனது ஓய்வு குறித்து மேத்யூ வேட் குறிப்பிடுகையில்”கடந்த இருபதுக்கு 20உலகக் கிண்ணத் தொடரின் முடிவில் எனது சர்வதேச நாட்கள் முடிந்துவிட்டன என்பதை நான் முழுமையாக அறிந்தேன்.
அதிர்ஷ்டவசமாக சில சிறந்த வாய்ப்புகள் எனக்கு வந்துள்ளன, அதற்காக நான் மிகவும் நன்றியுடனும் உற்சாகத்துடனும் இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவுஸ்திரேலிய அணி வீரர்கள், ஊழியர்கள் மற்றும் பயிற்றுவிப்பார்கள் அனைவருக்கும் மேத்யூ வேட் இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇