கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை தனது சேவைகளில் சேர்க்க வேலை செய்துவருகிறது. ஆனால் அதன் போட்டியாளராக உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை அதன் (Bing) பிங் சர்ச் எஞ்சினில் சேர்த்திருக்கிறது. இதனால் கூகுள் சர்ச் எஞ்சினிலும் அந்த வசதி அறிமுகம் ஆகியிருக்கிறது.கூகுள் எஸ்ஜிஇ (Google SGE) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வசதியின்படி, கூகுளில் தேடும்போது பயன்படுத்தும் குறிப்புச் சொற்கள் அடிப்படையில் கூகுள் தானே படங்களை உருவாக்கியத் தரும்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த அம்சம் ஏற்கெனவே Bing (பிங்) சர்ச் எஞ்சினில் உள்ளது.இதன் மூலம் தேடும் சொற்களுக்கு ஏற்ப படங்களை உருவாக்கும் திறன் கூகுள் சர்ச் எஞ்சினுக்குக் கிடைத்துள்ளது. ஒரு பயனர் ஏதேனும் ஒன்றைத் தேடும்போது, தேடும் சொற்களை அடிப்படையாகக் கொண்டு பொருத்தமான படங்கள் உருவாக்கப்படும், எடுத்துக்காட்டாக, தொப்பி அணிந்து சமையல் செய்யும் குதிரை என்று தேடினால் – கூகுள் AI மூலம் உருவாக்கப்பட்ட நான்கு படங்களைக் காட்டும்.“அந்த படங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்தால், தேடலில் பயன்படுத்திய குறிப்புச் சொற்களை விளக்கமான விவரங்களுடன் AI எவ்வாறு படமாக மாற்றுகிறது என்று தெரிந்துகொள்ளலாம்” என்று கூகுள் கூறுகிறது.
அதைத் திருத்தி, கூடுதல் விவரங்களையும் சேர்த்து சேர்த்து படங்களை விரும்பம் போல மேலும் மாற்றி அமைக்கலாம்.பாதுகாப்புக் காரணங்களுக்காக SGE மூலம் உருவாக்கப்படும் ஒவ்வொரு படமும் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்பதைக் குறிக்கும் வகையில் படங்களில் மெட்டாடேட்டா லேபிள் இருக்கும். வாட்டர்மார்க்கும் சேர்க்கப்பட்டிருக்கும் என்று கூகுள் கூறியுள்ளது.SGE வசதியை பயன்படுத்த 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது அமெரிக்காவில் மட்டும் AI மூலம் படத்தை உருவாக்கும் வசதி பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அதுவும் இப்போதைக்கு இந்த வசதி ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது .
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇