வாகன இலக்கத்தகடு அச்சிடும் நிறுவனத்திற்கு பணம் செலுத்துவதற்குத் தாமதம் ஏற்பட்டமையினால் வாகன இலக்கத்தகடு விநியோகிக்கும் செயற்பாடு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிசாந்த வீரசிங்க இதனைத் தெரிவித்தார்.
இந் நிலையில், தற்போது குறித்த நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்துவதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எனவே, வாகன இலக்கத்தகடு விநியோகப்படாத சந்தர்ப்பத்தில் வாகன இலக்கத்தை தற்காலிகமாக அச்சிட்டு காட்சிப்படுத்துமாறு வாகன உரிமையாளர்களிடம் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் கோரியுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇