புலமைப்பரிசில் பரீட்சை மதிப்பெண்களின் மீள்திருத்தம் இன்று முதல் ஆரம்பம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

புலமைப்பரிசில் பரீட்சை மதிப்பெண்கள் தொடர்பான மீள்திருத்தங்களை இன்று (27.01.2025) முதல் பெப்ரவரி 6 வரை இணையவழி ஊடாக சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

பெறுபேறுகளை மீள் பரிசீலனைக்காக இணையவழி முறைமையின் மூலம் விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு இது தொடர்பான மேலதிக தகவல்கள் தேவைப்படுமிடத்து , 1911 அல்லது பாடசாலைப் பரீட்சைகள் ஒழுங்கமைப்பு மற்றும் பெறுபேறுகள் கிளையின் – 0112784208/ 0112784537/ 0112786616/ 0112785922 இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த 23.01.2025 அன்று வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects