அடுத்த வருடம் பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான அனைத்து சீருடைகளையும் நன்கொடையாக வழங்க சீன அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்துள்ளார்.
கம்பஹா – கெப்பெட்டிபொல தேசிய பாடசாலையில் இடம்பெற்ற குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பாடசாலை மாணவர்களுக்கான உத்தியோகபூர்வ சீருடையில், கடந்த வருடம் நூற்றுக்கு 70 வீதத்தையும் இந்த வருடம் 80 வீதத்தையும் சீனா நன்கொடையாக வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, அடுத்த வருடம் பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான 100 வீத சீருடைகளை வழங்குவதற்கு தமது அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇