பால் பண்ணையாளர்களின் கொடுப்பனவுகளை விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என மில்கோ நிறுவனத்தின் புதிய தலைவர் ஜி.வீ.எச்.கோட்டாபய தெரிவித்துள்ளார்.
மில்கோ நிறுவனத்தின் நிதி நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்
தற்போது மில்கோ நிறுவனம் சுமார் 1.8 பில்லியன் ரூபாய் வங்கி மேலதிக பற்றுடன் இயங்குகிறது.
இதனால் இரண்டு வாரங்களுக்குள் வழங்க வேண்டிய மில்கோ நிறுவனத்தின் பால் பண்ணையாளர்களின் கொடுப்பனவுகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் தாம் உள்ளிட்ட மில்கோ நிறுவனத்தின் பணிப்பாளர் குழாம் நிதி நிலைமை மற்றும் பால் பண்ணையாளர்களுக்கு வழங்கவுள்ள கொடுப்பனவுகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇